சீரியஸாவே இருந்தா வாழ்க்கை சிரிச்சிடும்...

30.7.10

குட்டி தேவதையும் நானும்


வா வா என் தேவதையே !! பொன் வாய் பேசும் தாரகையே !!

பொய் வாழ்வின் பூரணமே!! பெண் பூவே வா!!
வான் மிதக்கும் கண்களுக்கு மயில் இறகால் மைஇடவா!!
மார்புதைக்கும் கால்களுக்கு மணி கொலுசு வாங்கிடவா!!
செல்ல மகள் அழுகை போல் ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை!!
பொன்மகளின் புன்னகை போல் யுக பூக்களுக்கு புன்னகைக்க தெரிய வில்லை!!
என் பிள்ளை எட்டு வைத்த நடையை போல் இந்த இலக்கண கவிதையும் நடந்ததில்லை!!
முத்துக்கள் தெறிக்கின்ற மழையை போல் ஒரு முன்னூறு மொழியில் ஒரு வார்த்தை இல்லை!!
தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததம்மா என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே!!
பிள்ளை நிலா பள்ளி செல்ல அவள் பையோடு என் இதயம் துடிக்க கண்டேன்!!
தேவமகள் தூங்கையிலே சில தெய்வங்கள் தூங்குகின்ற அழகை கண்டேன்!!
சிற்றாடை கட்டி அவள் சிரித்த போது என்னை பெற்றவள் சாயல் என்று பேசி கொண்டேன்!!
மேல்நாட்டின் ஆடை கட்டி நடந்தபோது இவள் மீசையில்லாத மகன் என்று சொன்னேன்!!
பெண்பிள்ளை தனியறை புகுந்ததிலே ஒரு பிரிவுக்கு ஒத்திகையை பார்த்து கொண்டேன்!! 
எதுக்குடா வைரமுத்துவின் வைர வரிகள திருடி இங்க பதிவுன்னு போட்ருக்கேன்னு யோசிக்காதிங்க!எனக்கும் ஒரு குட்டி தேவதை பொறந்திருக்காங்க .இந்த பாட்டுதான் இப்போ மனசில ஓடிட்டே இருக்கு.அதனாலதான் மனசு முழுக்க சந்தோசத்தோட என் முதல் பதிவ ஆரம்பிக்கறேன்.

Post Comment

2 comments:

 1. மாம்ஸ் ! ..
  அக்காமக (ஜப்பான்) எப்படி இருக்கா ?
  அவளை அழகா photo எடுக்கமாட்டே ?
  நீ எல்லாம் ஒரு photograper ? anyway நாங்க ஒத்துகறோம்.....

  ReplyDelete
 2. போடா சவுத்ஆப்ரிக்கா :)

  ReplyDelete

No Bad Words... தேவா பாவம்!!!