சீரியஸாவே இருந்தா வாழ்க்கை சிரிச்சிடும்...

15.8.11

எழுத்தாளருடன் நான்...

பதிவுலகிலும்,ட்விட்டரிலும்,இன்னபிற சமூகவலைத்தளங்களிலும் உலகமறிந்த(?!) பிரபலமாக நான் இருப்பது ஏற்கனவே நீங்கள் அறிந்த விடயம்.(மறுபடியும் ஆரம்பிச்சிட்டான்யா) அதற்குண்டான வழிமுறைகளை எற்கனவே என் வலைப்பூவில் இட்டு அந்தப்பதிவு பிரபலமானதும் உங்களுக்கு தெரிந்ததே....

பதிவுலகமும்,ட்விட்டரும் எனக்கு பல நண்பர்களை தந்திருக்கிறது.அந்த நண்பர்கள் வட்டத்தில் பல புகழ்பெற்ற எழுத்தாளர்களும் உள்ளனர் என்பது எனக்கு பெருமையளிக்ககூடிய விஷயம்.அதில் ஒருவரான கிழக்கு பதிப்பகத்தில் பல புத்தகங்களை எழுதியவரும்,புகழ்பெற்ற ட்விட்டருமான திரு.என்.சொக்கன் அவர்களை அறியாதவர்கள் எழுத்துலகில் இருக்க வாய்ப்பில்லை.அவர் இந்த வாரத்தில் சேலம் வந்திருக்கும்போது சேலத்திலிருந்து ட்விட்டும் அன்பர்களை சந்திக்க விருப்பம் கொண்டு ட்விட்டரில் தெரிவித்தவுடனே ஆர்வமாக அதை செயல்படுத்தி அந்த சந்திப்பையே ஒரு மாநாடு போல நடத்த பேராவல் கொண்டேன்.ஆனால்,அவரையும் அவர் சகோதரரையும் தவிர்த்து மூன்று பேர் மட்டுமே கலந்து கொண்டதால் மாநாடு நடத்த முடியவில்லை.அடுத்த தடவை முன்னரே அவர் வருவது தெரிந்தால் அதை மாநாடாக நடத்த உறுதி பூண்டுள்ளேன். :)

எழுத்தாளர் என்றவுடன் தமிழ்சினிமா எனக்களித்த கொடையான கணிப்புத்திறனை வைத்து ஒரு முட்டிக்கால் வரை நீளும் ஜிப்பாவும்,அதற்கு மேட்ச்சாக ஒரு வெள்ளை பேண்ட்டும்,விரலைவிட பெரிதான ஒரு இங்க்பேனாவும்,முக்கியமாக ஒரு ஜோல்னாப்பையும்,தடிமனான கருப்புநிற பிரேம் கொண்ட கண்ணாடியும் போட்டுக்கொண்டு வருவார் என்று நினைத்திருந்தால் என் நினைப்பில் மண். ஃபார்மலாக வந்து தமிழ்சினிமாவின் பார்முலாவை உடைத்துவிட்டார் சொக்கன். ஏனென்றால் அவர் சினிமாவே பார்ப்பதில்லையாம்.  :)

அவருடன் பேசிக்கொண்டிருந்த போது எழுத்தாளர் என்ற பந்தா இல்லாமல் நண்பர்களுடன் பழகுவதுபோல்தான் இருந்தது . கூடவந்த நண்பன் கார்த்தி புண்ணியத்தில் Iphone, Apple, Nokia, Microsoft, Bill gates, Android, Oracle, E-book reader, Kindle, Nook, NHM, SLR, Edu-comp, etc., அவருடைய தமிழ்இலக்கியவலைப்பூ என்று இரண்டு மணி நேரத்தில் இவ்வளவையும் அலசினோம்.மற்ற சேலம் நண்பர்கள் தவறவிட்ட அருமையான சந்திப்பு இது. ஞாயிற்றுக்கிழமை அன்று காதலர்கள் மட்டுமே வரும் சேலம் அண்ணாபூங்காவில் எழுத்தின் மீது கொண்ட காதலால் இந்த சந்திப்பு இனிமையாகவும்,பயனுள்ளதாகவும் அமைந்தது.

சந்திப்பின்போது எடுத்த பிரத்யேக படங்கள் உலக வலைப்பூ வரலாற்றில் முதல்முறையாக உங்கள் சேலம்தேவாவின் வலைப்பூவில் மட்டுமே காணக்கிடைக்கும்.(வேற யாரும் கேமரா எடுத்துட்டு வராதது நல்லதாப்போச்சு)

எஸ்.சொக்கன்,என்.சொக்கன்,ஸ்ரீனிவாசன்,கார்த்திக்

இதில் வலப்புறம் கடைசியில் நான்


















அண்ணாபூங்கா முன்பு

சேலத்துக்கு வரும் எழுத்தாளர்கள் ஒரு வாரத்துக்கு முன்பே தெரியப்படுத்தினால் இதுபோன்ற சந்திப்புகளை மாநாடாக நடத்த ஏதுவாக இருக்கும் என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.  :)


Post Comment

10 comments:

  1. பார்மலா வரலையே அவர் கேசுவலாதானே வந்திருக்கார்?? டவுட்டு!!

    ReplyDelete
  2. >>சந்திப்பின்போது எடுத்த பிரத்யேக படங்கள் உலக வலைப்பூ வரலாற்றில் முதல்முறையாக உங்கள் சேலம்தேவாவின் வலைப்பூவில் மட்டுமே காணக்கிடைக்கும்

    பில்டப் ஜாஸ்தியா இருக்கு? வெங்கட்டை காணோம்? அவர் ஃபோட்டோவை மாடரேட் பண்ணீட்டாரா>

    ReplyDelete
  3. இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. Hi Deva,

    I ( kolaarinnanban ) really missed it. I will join next time with you ppl. I was really waiting for this opportunity. But due to work I was unable to attend this meeting. Really sorry.

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. சேலத்தில் சந்திப்புகள் நிகழ்ந்தால் சொல்லுங்கள்.. நான் அங்கு இருந்தால் கலந்து கொள்ள முயற்ச்சிக்கிறேன்..

    ReplyDelete

No Bad Words... தேவா பாவம்!!!