சீரியஸாவே இருந்தா வாழ்க்கை சிரிச்சிடும்...
Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts

10.1.11

ஏமாற்றி விட்டார் கேப்டன்...!!

முதலிலேயே கூறிவிடுகிறேன்.இது எப்போதும் என் தளத்தில் வரும் அரிய கருத்துகள்(?!) அன்று.என்னுடைய அரசியல் பார்வை.



ஒரு வழியாய் எதிர்பார்க்கப்பட்டது போல் நடந்து முடிந்தது கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மாநாடு.10லட்சம்பேர்,50லட்சம்பேர்,1கோடிபேர் வருவார்கள் என்று கூவிக் கொண்டிருந்தார்கள்.கடைசியில் அவரே எதிர்பார்க்காத கூட்டம் வந்திருக்கும் போலத்தான் தெரிகிறது.

இதுக்கு ரஜினியே பரவாயில்லை என்று அவரின் ரசிகர்களே சொல்லியிருப்பார்கள்.அவராவது,இருந்த இடத்தில் இருந்து கொண்டு வருவேன்,வரலாம், வந்து கொண்டு இருக்கலாம் என்று வானிலை அறிக்கை போல் கூறிக் கொண்டிருப்பார்.

இவர் மாநாடு என்ற பெயரில் அனைத்து ரசிகர்களையும் மதியத்திலிருந்து இரவு வரை வெயிலில் தேவுடு காக்க வைத்துவிட்டு கூட்டணியை பற்றி கவலைப்படாதீர்கள். அதை நான் பார்த்து கொள்கிறேன்.நீங்கள் வீட்டுக்கு ஓழுங்காய் போய்ச் சேருங்கள் என்று அறிவுரை கூறி அனுப்பினார்.பத்திரிக்கையாளர்கள் வேறு மிகுந்த எதிரி்பார்ப்புடன் அவர் பேச்சையே கவனித்துக் கொண்டிருந்தனர்.கடைசியில் அவர்களுக்கும் பெருத்த ஏமாற்றமே.

ஆனால் எப்போதும் கலைஞர் ,அம்மா இருவரையும் விமர்சிப்பவர் கடைசிவரை மறந்து கூட ஜெயலலிதாவைப் பற்றி கூறாதது அவர் அ.தி.மு.க- வை நோக்கி நகர்வதையே காட்டுகிறது.சீட்டுக்கணக்கோ,பேரமோ படியவில்லை போல இருக்கிறது.அவர் கட்சியை அடகு வைக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.விற்றுவிடுவாரா.?! என்று தெரியவில்லை.

இவர்கள் என்னமோ செய்துவிட்டுப் போகட்டும்.காமராஜரையும்,கக்கனையும் போன்ற நல்ல தலைவர்களை இவர்களோடு ஓப்பிடும் போது வருத்தம் அளிக்கிறது.இது போன்று பிரம்மாண்டமான மாநாடுகள் காமராஜர் காலத்தில் நடந்திருக்குமா..? பாதுகாப்புக்காக வரும் காவல்துறை வாகனத்தையே வேண்டாம் என்று கூறுபவர் காமராஜர் என்று படித்திருக்கிறேன்.
கடைசிவரை குடிசையிலேயே வாழ்ந்து மறைந்த கக்கன் போன்ற தலைவர்களோடு இவர்களை தயவு செய்து ஓப்பிடாமல் இவர்களுடைய தீர்மானங்களை பற்றி மட்டும் பேசினால் நன்று.

1500 கி.மீட்டருக்கு பேனர்கள் வைத்து கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார்களாம்.எந்த கட்சியும் இது போன்று சாதனையை நிகழ்த்தியதில்லை.முடிந்தால் இதுபோல் செய்து காட்டுங்கள் என்று மற்ற கட்சியினரை உசுப்பேற்றியிருக்கிறார்.ஏற்கனவே நன்றாக (?!)இருக்கும் ரோடுகளை இன்னும் கொத்த போகிறார்கள்.

இலங்கைத்தமிழர்க்கு நீதியையும்,கச்சத்தீவையும், முல்லைப்பெரியாற்று நீரையும்,காவிரி ஆற்றுத் தண்ணீரையும் வாங்கித்தராமல் ஓயப்போவதில்லை போல இருக்கிறது இந்த உரிமைமீட்பு மாநாடு.

குடும்ப அரசியல் செய்கிறார்கள் என்று கேப்டன் கட்சியினர் அனைவரும் கலைஞரை ஏசிவிட்டு கேப்டன் அவர்களின் மனைவியையும்,மைத்துனரையும் ,"அண்ணியார்"" இளைஞர்களின் எழுச்சி நாயகன்" என்று கூறியது நகைச்சுவைக்குரியது.


நான் செய்வதை காப்பி அடிப்பதே கலைஞருக்கு வேலையாகப்போய்விட்டது என்று பலதடவை கூறினார்.எப்போதும் ஐந்து விரல்களை காட்டும் கலைஞர்



 நான் இந்த வெற்றியைக் குறிக்கும் முத்திரையைக் காட்ட ஆரம்பித்தவுடன்



அரசுசார்பில் தரும் பொங்கல்பைகளில் அவரும் அதைக் காப்பி அடிக்கிறார் என்று மிகவும் வருத்தப்பட்டார்

கலைஞரையையும் காவல்துறையையும் காய்ச்சி எடுத்தார்.அவர் படங்களில் வரும் காவல்துறையினரைப் போன்று எதிர்பார்க்கிறார் போல இருக்கிறது.உண்மையிலேயே விருதகிரி படத்தில் வருவதைப் போன்று காவல்துறையினரின் நிலைமை கவலைக்குரியது.ஸ்காட்லாண்ட் யார்டுக்கே நுணுக்கங்கள் கற்றுத்தரும் என் படங்களைப் பார்த்தாவது காவல் துறையினர் மேலும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறாமல் போனாரே..?!

இவ்வளவு கூட்டம் கூடிய மாநாட்டின் செய்திகள் எந்தப்பத்திரிக்கைகளிலும் பெரிய அளவில் வராதது கலைஞர் குடும்பத்தின் பத்திரிக்கை ஆக்ரமிப்பையே காட்டுகிறது.தி.மு.க வின் மாநாடாக இருந்திருந்தால் தினகரனில் பெரிய அளவில் வந்திருக்கும்.இதைப்பற்றி ஒரு சிறுபக்கம் கூட இல்லை.


இன்னும் தேர்தல் வருவதற்குள் இது போன்று மாநாடுகளையும்,வாக்குறுதிகளையும்,கட்சி மாறுதலையும்,அரசியல் தந்திரங்களையும் பார்க்கத்தானே போகிறோம்..!!

Post Comment