சீரியஸாவே இருந்தா வாழ்க்கை சிரிச்சிடும்...
Showing posts with label ஆனந்தவிகடன். Show all posts
Showing posts with label ஆனந்தவிகடன். Show all posts

6.9.12

என்ன மாதிரி சமூகத்தில் வாழ்கிறோம் நாம்..?!

காலம் காலமாக பகுத்தறிவு இல்லாமல் வாழும் மக்களுக்காக பயங்கர அறிவுடன் எழுதும் என்னைப் போன்ற இணைய எழுத்தாளர்களை எப்படி மதிக்க வேண்டும், எப்படி கொண்டாட வேண்டும் என்று கூட இந்த மக்களுக்கு தெரிய வில்லையே..?! இந்தக் கொடுமையை என்னவென்று சொல்ல..?! இதையே நான் ஆப்கானிஸ்தானில்  ஆரம்பித்து ஜிம்பாப்வே வரை உள்ள 196 வெளிநாடுகளில் (அவ்ளோ நாடுகள்தான் இருக்காம்.நெட்ல பாத்துட்டேன்) எழுதியிருந்தால் கிடைக்கும் மரியாதை அளப்பற்கரியது. 

கோடிக்கணக்கான பேர் படிக்கும்,தமிழர்களின் எண்ண ஓட்டத்தை பிரதிபலிக்கும், என்றும் இளமையான, இளைஞர்களுக்கும்,பெரியவர்களுக்கும் பிடித்த ஆயிரம் வார இதழ்கள் வந்தாலும் மக்கள் மனதில் என்றும் நெ.1 வார இதழான ஆனந்த விகடனுக்கு(அப்பா..செமையா பாராட்டியாச்சு...இன்னும் ஒரு வாரத்துக்கு என் பகுதியை தூக்க மாட்டாங்க) தெரிந்தது இந்த மக்களுக்கு தெரியவில்லையே... என் செய்வேன்..?!

இந்நேரம் ஒரு ஆயிரம் பேராவது நேரிலோ,போனிலோ,மின்னஞ்சல் வழியாகவோ வாழ்த்தியிருக்க வேண்டாமா..?! நூறு பேராவது நேரில் வந்து சால்வை போர்த்தியிருக்க வேண்டாமா..?! அல்லது பார்சலாவது அனுப்பியிருக்க வேண்டாமா..?! குறைந்தது 10 பாராட்டு கூட்டங்களுக்காவது அழைப்பு வந்திருக்க வேண்டாமா..?! பொற்கழுகு (ஹி..ஹி...பொற்கிழி(ளி) சின்னதா இருக்கும்)  பரிசளித்திருக்க வேண்டாமா..?!

ஒருவன் தன் புகழை தானாகவே எவ்வளவு நாளைக்குதான் கூவிக் கொண்டிருப்பது..?! "தானே கூவிய தானைத்தலைவன்" என்ற பட்டம் வரலாற்றில் இடம் பிடித்து விட்டால் என் செய்வது..?!என்னமோ பொங்கல்..ச்சீ... போங்கள்.

இவ்வளவு கூவிய பிறகும் எதற்கு கூவுகிறான் என்று கேட்டு வயிற்றெரிச்சலை வாங்கிக்கட்டிக் கொள்ள வேண்டாம். (சொன்னாதாண்டா தெரியும்.மேட்டருக்கு வா...) இந்த வார விகடன் இணையத்தளத்தில் என் விகடன் பகுதியில் தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவனான என்னையும் மதித்து வலையோசை பகுதியில் கௌரவித்துள்ளார்கள். இப்பவாவது போய்ப் பாத்துட்டு ஒரு அற்புத எழுத்தாளர் வெளிநாட்டுக்கு போய்டாம ஏதாவது ஒண்ணு  உடனடியா செய்ங்க....அப்புறம் உங்களுக்குதான் நஷ்டம்.  :)

Post Comment

22.1.11

ஆனந்தம்.. பரமானந்தம்..!!



இந்தவார விகடனில் வலைமேயுதே...ச்சீ..சாரி..வலைபாயுதேவில் பிரபலபதிவர்"சேலத்துமாங்கனி""சேலத்துசிங்கம்,புலி,சிறுத்தை"etc..,(மொத்தத்துல மனுசன் இல்ல) சேலம்தேவாவின் ட்விட் ஒன்று வந்து ஆனந்தவிகடன் அதன் வரலாற்று பெருமையை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. உடனே அகிலம் முழுவதும் உள்ள என் பல்லாயிரக்கணக்கான(!?) ரசிககண்மணிகள் விகடன் விற்பனையை உயர்த்தி  என்னைக் ஆனந்தகண்ணீர் விட வைக்காதீர்கள்.ஹி.ஹி..ஹி...

அடுத்ததாக நம்ம அட்ராசக்க சி.பி.செந்தில்குமார் ஸ்டைலில் சன் டிவியிலோ,விஜய் டிவியிலோ நம் முகம் தெரிய என் செய்ய  வேண்டும்..?! தினத்தந்தியிலோ,தினமலரிலோ முன் பக்கத்தில் நம் பதிவுகள் வர என்ன செய்ய வேண்டும்..? குமுதம் குங்குமம் பத்திரிக்கைகளில் நாம் எப்படி கும்முவது..?! மூஞ்சி புத்தகத்தில்(அதாங்க பேஸ்புக்) நம்ம மூஞ்சி பிரபலமாக என்ன செய்ய வேண்டும்..? என்பது போன்ற பதிவுகளை வரிசையாக இடக்கூடிய ஒர் நிலையை நான் அடைந்து விட்டதாக எண்ணுகிறேன்.

இந்த உயரியநிலையை நான் அடைந்தது எப்படி என்று பல தொலைபேசி விசாரிப்புகள்,மின்னஞ்சல்கள்..எனவே,பதிவுலக நண்பர்களுக்கு விளக்க கடமைப்பட்டிருக்கிறேன்.

வலையை மேய்ந்து கொண்டிருக்கும்போது எங்கு சைன்இன்,சைன்அப்,ரிஜிஸ்டர் என்று பார்த்தாலும் வேறு யாராவது நமது பெயரை உபயோகிப்பதற்கு முன் உடனே நமது பெயரை பதித்துவிடவேண்டும்.ட்விட்டரில் சேர்ந்த 2 நாட்களில் என்னை பின்தொடர்பவர்கள் 20 பேர்மட்டுமே.ஆனால்,நான் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கையோ 300-ஐத் தாண்டும்.தீயாக வேலை செய்ய வேண்டும்.ஹி.ஹி..ஹி...

ஆளில்லாத டீக்கடையாக இருந்த என் மின்னஞ்சல் முகவரி இது போன்ற செய்கைகளால் நிரம்பி வழிந்தது குறிப்பிடத்தக்கது.ஆனால்,இதில் இலவசமாக நமது பெயரை பரப்புவர்களிடம் மட்டும்தான் நமது முத்திரையை பதிக்க வேண்டும்.ஒருசில தளங்களில் பேபால்,பேகாப்பி, பேடீ(அதாங்க... PAYPAL) என்று இருப்பதை பார்த்தால் வாயுவேகத்தில் திரும்பிவிடவேண்டும்.ஹி.ஹி..ஹி... 

நமக்கு வரும் மின்னஞ்சல்கள்,குறுஞ்செய்திகள்,படிக்கும் பத்திரிக்கைகள்,பார்க்கும் செய்திகள் என்று எதைப்பார்த்தாலும் நமக்கு பதிவிடுவதற்கும்,ட்வீட்டுவதற்கும் ஏதேனும் செய்தி இருக்கிறதா என்ற கோணத்திலேயே பார்க்கவேண்டும்.(மொத்தத்தில் உருப்படியா எந்த வேலையும் செய்யக்கூடாது)

இந்த முறையில் எனக்கு வந்த நல்ல குறுஞ்செய்தியை என்னுடைய ட்விட்டர் பக்கத்தில் டைப்பியிருந்தேன்.அதுதான் இப்போது விகடனில் வந்து பெருமை படுத்தியுள்ளது.(காப்பி அடிச்சத எப்டி பெருமை அடிக்குது பாரு...) 

இன்னும் இந்த சமூகத்திற்கு இதுபோன்ற பயனுள்ள விஷயங்களை என் உயிர்உள்ளவரை செய்வேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொல்கிறேன்..சாரி கொள்கிறேன்.ஹி.ஹி..ஹி...(உயிர எடுக்கிறானே)

ஸ்ஸ்ஸ்..அப்பா... எப்டியோ ஒரு பதிவு தேத்தியாச்சு...ஹி.ஹி..ஹி...

Post Comment