கீழ எழுதியிருக்கறத படிக்காம எதுவும் தப்பா முடிவு பண்ணி லாரி, ஆட்டோ, இத்யாதி.. இத்யாதி.. எதுவும் அனுப்பிச்சிராதீங்க...நான் பச்சப்பயபுள்ள...
ஒரு மாஜி மந்திரியின் பகல்
எத்தனை நேரம்தான் விட்டம் பார்ப்பேன்.
விடிந்துவிட்டதென்று வெளிச்சம் சொல்கிறது.
ஆனால்,என்னை மட்டும் இரவு விட்டுவிட்டு விடிகிறது.
மீண்டும் புரண்டு படுக்கிறேன்.
நன்றி..படுக்கையே நன்றி.
என்னை நிராகரியாதிருப்பது நீ மட்டும்தான்.
கடிகாரம் பார்க்கிறேன்.
அதுவும் நின்று போய்எனது
நிகழ்காலம் காட்டுகிறது.
மணி ஒன்பது...
பழைய கணக்கில் இது
பார்வையாளர் நேரம்.
இப்போது...
பால்காரன்,பத்திரிகை பையன் தவிர
புதிதென யாரும் உள்ளே வருவதில்லை.
பத்திரிகை பார்க்கிறேன்.
ஒரு பத்திரிகையிலும் உயிர் இல்லை.
காரணம்... என் பெயர் இல்லை.
எந்த அணியில் இருக்கிறேன்..?!
எனக்கே தெரியவில்லை.
இனிமேல்,கட்சிக்கு
பன்றி சின்னம்தான் கேட்க வேண்டும்.
அதுதானே பலகுட்டி போடுகிறது.
அந்த வேலைக்காரன்
என் தேநீர்க்கோப்பையை
சட்டென்று வைக்கும்
சப்தம் சரியில்லையே..!!
அது,என் மீது அவன் நிறைவேற்றும்
நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் நகலா..?!
என் மனைவி கூட கட்சிகாரி ஆகிவிட்டாள்.
என்னை அவள் பார்ப்பது
எப்போதோ ஒருமுறைதான்.
நேற்றுவரை குதிரை மேல் சவாரி.
இன்று...நத்தைக்கூட்டின் மேல் அம்பாரி.
ச்சே..நாக்கு துருப்பிடித்து விட்டது.
சாயங்காலமானால் கச்சேரிக் காய்ச்சல்.
அடிக்கடி தோள்களில் அரிப்பு.
டாக்டரை பார்த்தேன்.
ஒரே மருந்தை மும்முறை எழுதினார்.
மாலை.. மாலை.. மாலை.
போனவாரம் ரகசியமாய் ஒரு
இலக்கியக்கூட்டம் போயிருந்தேன்.
என் பினாமிகளைப் போலவே
எவனும் வரவில்லை.
வாசலில் வைத்த கற்கண்டை
மொய்க்க கூட ஈ இல்லை.
பிறகு பத்துபேர் வந்ததில் அவை நிறைந்தது.
யோசித்தேன்...
பணக்காரன் பின்னால் பத்து பேர்
பைத்தியக்காரன் பின்னால் பத்து பேர்
இனிமேல் நான்...
பணக்காரனா..?!
பைத்தியக்காரனா..?!
ஐப்பசி வானமாய் எப்போதும் முணுமுணுக்கும்
என் வீட்டு தொலைபேசி
இப்போது..வைகாசி வானமாய் மௌனித்து விட்டது.
நானே அழைக்கிறேன்.
இப்போதுதான் இந்தியாவில்
எப்போதும் குளிக்கிறார்கள்.
காது பிளக்கும்
தனிமையின் இரைச்சலில்
கண்மூடி சிந்திக்கிறேன்.
என்னை நேசிக்க ஊருக்கு உத்தரவிட்டேன்.
நான் யாரை நேசித்தேன்..?!
சுற்றி சுவர் எழுப்பி
சுற்றி சுவர் எழுப்பி
நானும் சுவரானேன்.
முடிவுக்கு வந்துவிட்டேன்
எதிர்கால திட்டம்
இன்னொரு முறை மந்திரியாவதல்ல...
இனியேனும் மனிதனாவது.
வைரமுத்துவின் இந்த வைர வரிகள் அனைத்து கட்சி பாகுபாடில்லாம எல்லா அரசியல்வியாதிகளுக்கும் பொருந்தும்.
மக்கள் சேவையே மகேசன் சேவைன்னு சொல்வாங்க...புரிஞ்சிகிட்டா சரி.
சிறப்பு பரிசு
இந்த பதிவைப்பற்றி பின்னூட்டம் இடுபவர்களுக்கு வைரமுத்து அவர்களின் குரலில் A.R.ரஹ்மான் இசையில் வந்த தேன் வந்து பாயுது ஆடியோ வடிவிலான கவிதை தொகுப்பின் இணைப்பு வழங்கப்படும். முன்னால் வருபவர்களுக்கே முன்னுரிமை..!!ஹி.ஹி..
ஹீம்ம்...பிளாக்குக்கு எப்படியெல்லாம் வர வைக்க வேண்டி இருக்கு..!!
சோதித்த மறுமொழி :(
ReplyDeleteசோதித்த மறுமொழி 2
ReplyDeleteசிறப்பு பரிசு
ReplyDeleteஇந்த பதிவைப்பற்றி பின்னூட்டம் இடுபவர்களுக்கு வைரமுத்து அவர்களின் குரலில் A.R.ரஹ்மான் இசையில் வந்த தேன் வந்து பாயுது ஆடியோ வடிவிலான கவிதை தொகுப்பின் இணைப்பு வழங்கப்படும். முன்னால் வருபவர்களுக்கே முன்னுரிமை..!!ஹி.ஹி..
எனக்கு கிடைக்குமா ?
http://erodethangadurai.blogspot.com/
ஐப்பசி வானம், கட்சிகாரியான மனைவி, கற்கண்டில் மொய்க்கும் ஈ என பின்னூட்டத்திற்கு பிடித்தமான வரிகளைப் படித்து முடிக்கையில் ....எழுதியது வைரமுத்தா...அப்போ NO COMMENTS
ReplyDelete