சீரியஸாவே இருந்தா வாழ்க்கை சிரிச்சிடும்...

14.4.11

வாழ்த்து சொன்னது ஒரு குத்தமா..?!

சித்திரை திருநாள் அன்னிக்கு பெரிய பெரிய தலைவர்கள் எல்லாம் வாழ்த்து சொல்றாங்களே...நண்பர்கள் பலர் பேஸ்புக்கிலும்,பஸ்ஸிலும்,ட்விட்டரிலும் தமிழ்புத்தாண்டு வாழ்த்துகள் சொல்லியிருக்காங்களேன்னு நாமளும் சொல்லி வைப்போம்ன்னுட்டு தெரியாம நானும் எல்லாத்திலயும் தீயா வேலை செஞ்சு வாழ்த்து சொன்னேன்.

அதுக்கு பஸ்ஸில்(Google Buzz) அம்ஜத்கான் என்கிற நண்பர் ஒரு சின்ன(?!)விளக்கம் கொடுத்திருக்காரு பாருங்க...அழுதுட்டேன்.இனிமே எதைப்பத்தியும் முழுசா தெரியாம யாருக்கும் வாழ்த்து சொல்லக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்.அவ்வ்வ்வ்வ்.....

விளக்கம் கீழே.


சித்திரை மாதத்தில் ‘பிறப்பதாகச்’ சொல்லப்படும் இந்த ஆண்டுப் 

பிறப்புத்தான் தமிழர்களின் புத்தாண்டா?
வரலாற்று உண்மைகளையும், ஆய்வுகளையும் தர்க்கரீதியாகச் சிந்தித்துப் 
பார்ப்பதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். அத்துடன் பண்டைத் 
தமிழரின் ‘காலக் கணக்கு’ முறை குறித்தும் கருத்தில் கொள்ள 
விழைகின்றோம்.
இப்போது வழக்கத்தில் உள்ள ஆண்டுக் கணக்கு முறையைக் கவனத்தில் 
எடுத்துக் கொண்டால் அது பற்சக்கர முறையில் உள்ளதைக் கவனிக்கலாம்
இந்த அறுபது ஆண்டுகளுக்கும் பரபவ முதல் அட்சய என்று 
அறுபது பெயர்கள் இருக்கின்றன.
இந்த அறுபது ஆண்டுகளின் பெயரில் ஒரு பெயர் கூடத் தமிழ்ப் பெயர் இல்லை!
இந்த 
முறை வடநாட்டு மன்னனான சாலிவாகனன் என்பவனால் கிறிஸ்துவுக்கு பின் 78ம் 
ஆண்டில் வடநாட்டில் ஏற்படுத்தப்பட்டது என்று வரலாற்று ஆசிரியர்கள் 
கூறுவார்கள். கனிஷ்கன் என்ற அரசனாலும் இது ஏற்படுத்தப்பட்டது என்று 
கூறுவோரும் உண்டு
பின்னர் தென்னாட்டில் ஆரியர்களின் ஊடுருவலால், 
ஆட்சியால் இந்த ஆண்டு முறை படிப்படியாக பரப்பப்பட்டு நிலை 
நிறுத்தப்பட்டுள்ளது
ந்த ஓர் இனத்தவரின் ஆட்சி ஒரு நாட்டில் 
நிறுத்தப்படுகின்றதோ அந்த இனத்தவரின் பழக்க வழக்கங்கள், பண்பாடுகள், 
கலைகள் போன்றவை அந்த நாட்டினரின் பழக்க வழக்கங்களோடு கலந்து விடுவது 
இயல்பு. அந்த வகையில் இந்தச் சாலிவாகன முறை பின்னர் மெல்ல மெல்ல நடை 
முறைப் பழக்கத்திற்கு வந்து விட்டது. அறுபது ஆண்டு பற்சக்கர முறை
காரணமாக ஆரியர்களிடையே அறுபது வயது நிரம்பியவர்கள் சஷ்டி பூர்த்தி என்ற 
அறுபதாண்டு விழாவைக் கொண்டாடும் வழமையும் இருக்கின்றது.

மேலும் இந்த அறுபது ஆண்டு முறையைப் புகுத்திய ஆரியத்தின் விளக்கமும் 
மிகுந்த ஆபாசம் நிறைந்த பொருள் கொண்டதாகும். அபிதான சிந்தாமணி என்ற 
நூலில் 1392ம் பக்கத்தில் கீழ்வருமாறு குறிப்பிடப்படுகின்றது.
“ஒருமுறை நாரதமுனிவர், கிருஷ்ணமூர்த்தியை ‘நீர் அறுபதினாயிரம் 
கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு கன்னிகையாவது தரலாகாதா?’ 
என்று கேட்டார். அதற்குக் கண்ணன், ‘நான் இல்லாத பெண்ணை வரிக்க’
என்றான். இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதினாயிரம் வீடுகளிலும் சென்று 
பார்த்தார். ஆனால் எங்கும் கண்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால், 
நாரதர் மீண்டும் கண்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மையல் கொண்டு அவரை 
நோக்கி ‘நான் தேவரீரிடம் பெண்ணாக இருந்து ரமிக்க எண்ணம் கொண்டேன்’ 
என்றார். கண்ணன் நாரதரை யமுனையில் ஸ்நானம் செய்ய ஏவ, நாரதர் அவ்வாறே 
செய்து, ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினார். இவருடன் கண்ணன் அறுபது வருடம் 
கூடி, அறுபது குமாரர்களைப் பெற்றார். அவர்கள் ‘பிரபவ முதல் அட்சய’
இறுதியானவர்களாம். இவர்கள் வருஷமாகும் பதம் பெற்றார்கள்.”
மேல்நாட்டு அறிஞர் சிலேட்டர் என்பவர் தமிழருடைய 
வானநூற் கணித முறையே வழக்கில் உள்ள எல்லாக் கணிதங்களிலும் நிதானமானது 
என்று கூறியுள்ளார்

தொல்காப்பியத்திலும், சங்க நூல்களிலும் காணப்படும் 
வானியற் செய்திகள் உருப்பெற்றமைக்கு பல்லாயிரமாண்டுகள் 
பிடித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை

ஆரியர் ஊடுருவலுக்கு 
முன்னரேயே தமிழர்கள், வானியலில் அரும் பெரிய அளவில் முன்னேறி இருந்தனர் 
என்று அறிஞர்கள் கூறுகின்றார்கள். தமிழகத்துப் பரதவர்கள் திங்களின் 
நிலையைக் கொண்டு சந்திரமானக் காலத்தை கணித்தனர் என்றும், தமிழகத்து 
உழவர்கள் சூரியன், திங்கள் ஆகியவற்றின் இயக்கத்தையும், பருவங்களையும் 
அறிந்திருந்தனர் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் வானியலில் வல்ல அறிஞர்களை ‘அறிவர், கணி, கணியன்’ என 
அழைத்தார்கள். அரசனுடைய அவையில் பெருங்கணிகள் இருந்ததாகச்
சிலப்பதிகாரம் கூறுகின்றது. மூவகைக் காலமும் நெறியினாற்றும் 
‘அறிவர்கள்’ குறித்துத் தொல்காப்பியரும் குறிப்பிடுகின்றார்.

அதாவது பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாட் பொழுதின் அறுபது நாழிகைகள் 
என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு - அதாவது 24 
மணித்தியாலங்களோடு - அச்சொட்டாகப் பொருந்துகின்றன. தமிழர்கள் ஒரு நாட் 
பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து 
வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்.

பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் 
வகுத்தார்கள். ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த 
ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.

காலத்தை, அறுபது நாழிகைகைளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு 
பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை 
இளவேனிற் காலத்தில்தான் தொடங்குகின்றான். இங்கே ஒரு மிக முக்கியமான 
விடயத்தை வாசகர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்! பண்பாட்டுப் பெருமை 
கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, 
தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள். தமிழர்கள் 
மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், 
மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு 
வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே 
தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.

இன்றும் கூட ஆரியர்களின் சித்திரை 
வருடப்பிறப்பு, பண்டிகை, தன் இனத்துப் பண்டிகைகளாக 
எண்ணி மயங்கிப் போய்க் கிடக்கின்றான் தமிழன்.

“தமிழனுக்கு தைத்திங்கள் முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு ஆகும்.”

பொங்கல் திருநாள் தமிழரின் தனிப்பெரும் திருநாள் ஆகும்.

பொங்கல் திருநாளைத் தமிழர்கள் ‘புதுநாள்’ என்று அழைத்தார்கள். பொங்கல் 
திருநாளுக்கு முதல் நாளை, போகி (போக்கி) என்று அழைத்தார்கள். போகி 
என்பது, போக்கு - போதல் என்பதாகும். (ஓர் ஆண்டைப் போக்கியது- போகியது- 
போகி) பொங்கல் என்பது பொங்குதல் - ஆக்குதல். இது தொழிற் பெயர். 
புத்தொளி, பொங்கல் என ஆகுபெயர் ஆகியுள்ளது.

‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற முதுமொழியை ‘புத்தாண்டு வந்தால் 
புதுவாழ்வு மலரும்’ -என்ற கருத்தோடு ஒப்பு நோக்கிப் பார்க்க வேண்டும்.

தமிழர்-யப்பானிய பண்பாட்டு ஒற்றுமை நிலையை வெளிப்படுத்தும் 
நடைமுறையாகத் தைப்பொங்கல் விளங்குகிறது. யப்பானியர் தை 14ம் திகதி 
அன்று பழைய பயன்பாட்டுப் பொருட்களை எரிப்பார்கள். தமிழர்களும் அவ்வாறே 
செய்கின்றார்கள்.

இந்தக் கட்டுரைக்குப் பல நூல்களும், ஆய்வுநூல்களும் பயன்பட்டன. 
முக்கியமாகத் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், தமிழர் நாகரிகமும் 
பண்பாடும, ஒப்பியன் மொழி நூல், வாக்கிய பஞ்சாங்கம், பண்பாட்டுக் 
கட்டுரைகள், செம்பருத்தி சஞ்சிகைக் கட்டுரைகள், பொங்கலே தமிழ்ப் 
புத்தாண்டு- மலேசிய சிறப்பு மலர், தமிழர் யப்பானியர் வாழ்வில் 
தைப்பொங்கல் போன்ற நூல்கள் பேருதவி புரிந்தன. சில சொல்லாக்கங்களும் 
சொல்லாடல்களும் அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளன. 


தையே முதற்றிங்கள் தை முதலே ஆண்டு முதல்
பத்தன்று நூறன்று பன்னூ றன்று
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு, தைம் முதல் நாள், பொங்கல் நன்னாள்
நித்திரையில் இருக்கும் தமிழா.
சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு
அண்டிப் பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் காட்டியதே
அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழர்க்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு. -பாவேந்தர்


இலக்கியங்களில் தமிழ் திங்கள்கள்

தேவாரம்

சிகரத்துஇடை இளவெண்பிறை வைத்தான் இடம், தெரியில்---
முகரத்துஇடை முத்தின்(ன்) ஒளி பவளத்திரள், ஓதம்,
தகரத்துஇடை தாழைத்திரள் ஞாழல்-திரள், நீழல்,
மகரத்தொடு சுறவம், கொணர்ந்து எற்றும் மறைக்காடே.

ஆரிய முட்டாள்களின் ஆண்டு முறையை(சித்திரை) பின்பற்றும் முட்டாள் கூட்டம் கூறும் காரனப்படி பார்த்தாலும் யாரும் ஒரு துவக்கத்தை உச்சியில்துவக்குவதில்லை. 
ஒரு நாள் பொழுது துவங்கும் பொழுது ஞாயிறு உச்சியில் இருக்கும் பொழுதுதுவக்குவதில்லை. மாறாக ஒரு நாள் நள்ளிரவில் துவங்கி சிறிது சிறிதாக விடியத்துவங்கி அரை நாள் முடியும் பொழுது ஞாயிறு உச்சிக்கு வருகின்றது. மீதும் ஞாயிறு சிறிது சிறிதாக மறையத் துவங்கி நள்ளிரவில் அந்த நாள் முடிவடைகின்றது. அது போலவே ஆண்டும் ஞாயிறு உச்சியில் இருக்கும் பொழுது துவங்குவதில்லை. உலகில் எந்த இனமும் கொடும் கோடை காலத்தில் தங்கள் ஆண்டினை துவங்குவதில்லை.

உலகின் முதன்மையாக தோன்றிய இனங்களுள் முதன்நிலை பெறும் தமிழ் மொழி தமிழர் இனம் தமிழர் நாகரீகம் என்பவற்றின் தாயகம் குமரிக்கண்டம் என்றே தொல்பொருள்வல்லுநர்கள் தமது ஆய்வுகளின் மூலம் நிறுவியுள்ளனர்.

பண்டைத் தமிழன் இயற்கையை வணங்கி வந்தவன். ‘மழை, வெயில்,குளிர், பனி, தென்றல்,வாடை’ இவை மாறி மாறிப் பருவக் காலங்கள் மனிதனை ஆண்டு வந்ததால் தமிழன்ஆண்டு என்று அழைத்தான். என திரு. வெங்கட்ராமன் குறிப்பிடுகின்றார். மேல்நாட்டு அறிஞர் சிலேட்டர்என்பவர் தமிழருடைய வானநூற் கணித முறையே வழக்கில் உள்ள எல்லாக் கணிதங்களிலும் நிதானமானது என்று கூறியுள்ளார். தொல்காப்பியத்திலும், சங்கநூல்களிலும் காணப்படும் வானியற் செய்திகள் உருப்பெற்றமைக்கு பல்லாயிரமாண்டுகள் பிடித்திருக்கும். ஆரியர் ஊடுருவலுக்கு முன்னரே தமிழர்கள் வானியலில் அரும் பெரிய அளவில் முன்னேறி இருந்தனர் என்று அறிஞர்கள் கூறுகின்றார்கள். தமிழகத்துப்பரதவர்கள் திங்களின் நிலையைக் கொண்டு சந்திரமானக் காலத்தை கணித்தனர் என்றும்,தமிழகத்து உழவர்கள் சூரியன், திங்கள்ஆகியவற்றின் இயக்கத்தையும் பருவங்களையும் அறிந்திருந்தனர் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் வானியலாளர்களை ‘அறிவர், கணி, கணியன்’ என்றெல்லாம் அழைக்கப்பட்டுள்ளது. அரசனுடைய அவையில் பெருங்கணிகள் இருந்ததாகச்சிலப்பதிகாரம் கூறுகின்றது. மூவகைக் காலமும் நெறியினாற்றும் "அறிவர்கள்" குறித்துத்தொல்காப்பியரும் குறிப்பிடுகின்றார்.

பண்டையத் தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு, காலத்தைப் பகுத்தனர்.

"வைகறை, காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம்" என்று ஒரு நாளை ஆறு சிறு பொழுதுகளாக பகுத்திருந்தனர். அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பை அறுபது நாழிகைகள் எனவும் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறு பொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைள் எடுக்கின்றன.

1
நாழிகை
-
24 நிமிடங்கள்
60
நாழிகை
-
1440 நிமிடங்கள்

இதனை இன்றைய கிருத்தவ கணக்கீட்டின் படி பார்த்தால்
1440
நிமிடங்கள்
-
24 மணித்தியாலங்கள்
24
மணித்தியாலங்கள்
-
1 நாள்

இவ்வாறு இன்றைய நவீன காலக் கணிப்பீட்டு முறையுடன் அச்சொட்டாகப் பொருந்தும் வகையில், பண்டையத் தமிழரின் காலக் கணிப்பீட்டு முறைமை மிகவும் நுட்பமாகக் கணிக்கப்பட்டுள்ளது.
நாட்களை இவ்வாறு கணக்கிட்டத் தமிழன்;

காலத்தை ஆறு பருவங்களாகப் பகுத்தான்.

1.
இளவேனில்
-
தை - மாசி மாதங்கள்
2.
முதுவேனில்
-
பங்குனி - சித்திரை மாதங்கள்
3.
கார்
-
வைகாசி – ஆனி மாதங்கள்
4.
கூதிர்
-
ஆடி - ஆவணி மாதங்கள்
5.
முன்பனி
-
புரட்டாசி – ஐப்பசி மாதங்கள்
6.
பின்பனி
கார்த்திகை - மார்கழி மாதங்கள்

பண்டையத் தமிழர் தம் தாய் மொழியாக தமிழையும் தமது நாகரீகத்தையும் தம் இன அடையாளங்களையும் பேணி வந்த அதேவேளை, தமது நாகரீகத்தின் அடையாளமாககாலக்கணிப்பீடுகளையும் சரியாக மதிப்பீடு செய்து தமது வாழ்வியல் கூறுகளையும் நிர்ணயம் செய்து கொண்டனர் என அலெக்ஸ்ராண்டர்-கோண்டிரடோஸ், எஸ்.ஜி.வெல்ஸ்போன்ற மெய்யியலாளர்கள் தமிழர்களின் பூர்வீகத்தை உறுதி செய்துள்ளனர்.

இந்த மெய்யியலாளர்களின் கருத்துப்படி ஆதிக்குடியினரான உலகின் மூத்த தமிழ்க் குடியினர், அவர்களது மொழி மற்றும் வாழ்வியல் கூறுகளை பூமியின் சுழற்சியை சரியாக மதிப்பிட்டும், இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பகுத்தும் தமது காலக் கணிப்பீட்டு முறைமைகளை உருவாக்கியவர்களாவர்.

காலத்தை, அறுபது நாழிகைகைளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறுபருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு தொடக்கத்தைஇளவேனிற் காலத்தின் ஆரம்ப நாளாகக் கொண்டு தை மாதத்தினை தனது இனத்துக்கானபுத்தாண்டாகப் பிரகடனப் படுத்திக்கொண்டான்.

பொங்கல் திருநாளைத் தமிழர்கள் புதுநாள் என்றே அழைத்தார்கள். பொங்கல் திருநாளுக்கு முதல் நாளை, போகி (போக்கி) என்று அழைத்தார்கள். போகி என்பது, போக்கு - போதல் என்பதாகும். (ஓர் ஆண்டைப் போக்கியது - போகியது - போகி) பொங்கல் என்பது பொங்குதல் - ஆக்குதல். இது தொழிற் பெயர். புத்தொளி, பொங்கல் என ஆகுபெயர் ஆகியுள்ளது.

எனவே போகி என்பது போக்கிய நாளானது. (பழைய ஆண்டு) புது நாள் என்பது புத்தாண்டாகவும் கொள்ளப்பட்டது. எனவே தமிழரின் புத்தாண்டு பழந்தமிழரின் காலக் கணிப்பீட்டுக்கு அமைவான தை மாதம் முதலாம் நாளிலேயே கொண்டாடப்பட வேண்டும்.
தை மாதச் சிறப்பு

தமிழாண்டின் தொடக்கக் காலகட்டம், உழைப்பின் பயனைப் பெற்று மகிழும்காலகட்டமாகவும் அமைந்தது. புத்தொளி வழங்கிய கதிரவனைப் போற்றிய தமிழ் நெஞ்சம் உழைப்பையும், தனக்குத் துணை நின்ற உயிரையும் போற்றியது. கதிரவனின் சுழற்சியைக் கொண்ட காலக்கணிப்பைக் காட்டும் அறிவியலும், நன்றியுணர்வை வெளிப்படுத்தும் முதிர்ந்த பண்பாடும் பொங்கல் விழாவில் போற்றப்படுவதை நாம் காணலாம். "தை பிறந்தால் வழி பிறக்கும்" எனும் தமிழர் முதுமொழியை "புத்தாண்டு வந்தால் புதுவாழ்வு மலரும்" என்ற கருத்தோடு ஒப்பு நோக்கிப் பார்க்க வேண்டும்.

தமிழர்கள் மட்டுமல்ல, உலகத்தில் பல்வேறு இன மக்களும் தத்தமக்குரிய புத்தாண்டைஇளவேனில் காலத்திலேயே கொண்டாடுகின்றனர். தத்தமது புதுப் பணிகளையும்,நற்செயல்களையும் தொடங்குகின்றனர். ஆனால் சித்திரை மாதத்தில் குறிப்பாகத் தமிழர்கள்எந்த நற்செயல்களையும் தொடங்குவதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தை மாத தொடக்க நாளை தமிழர்கள் தைப்பொங்கல் நாளாக கால காலமாக கொண்டாடி வருகின்றனர். அதில் தோரணங்கள் கட்டுதல், புதுப் பானையில் புது நீர் அள்ளி பொங்கல் வைத்தல், பொங்கும் போது “பொங்கலோ பொங்கல்” என ஆரவாரம் செய்தல், பொங்கலை பரிமாறி உண்ணல், புத்தாடை அணிதல், முன்னோர்க்கு படையல் இடுதல், மாடுகளுக்கு உணவளித்தல், பணியாளர்களுக்கு புத்தாடை வழங்குதல் போன்ற செயல்பாடுகள் தமிழர்களிடையே பழங்காலந் தொட்டு இருந்து வருகின்றது.

இவை அனைத்தும் நீண்ட நெடுங்காலமாக யப்பானியர்களாலும் கடைப்பிடிக்கப் படுகின்றது. இது அவர்களுக்கும் எமக்கும் இடையிலான ஒரு வரலாற்றுப் பண்பாட்டுஒருமைப்பாடு இருந்திருக்க வேண்டும் என சில வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்த தைப்பொங்கல் நாள் பண்டையக் காலம் தொட்டே சமயச் சார்பற்று அனைத்து தமிழரதும் திருநாளாக விளங்குகின்றது. அதேப் போன்றே தை மாதம் முதல் நாள் தொடங்கும் தமிழ் புத்தாண்டு நாள்; உலகில் தமிழ் பேசும் அனைவரதும் புத்தாண்டு பிறப்பு நாள் என்பது தமிழ் அறிவியலாளர்களின் ஆய்வின் முடிவாகியுள்ளது.

இனி தமிழ் மாதங்களின் இல்லை, இல்லை - தமிழ்த் திங்கள்களின் பெயர்களைப் பார்ப்போமா?தை முதல் மார்கழி ஈறாக உள்ள 12 திங்கள்களுக்கும் தனித் தமிழ்ப் பெயர்கள் உண்டு.

அவை எவை என அறிவீர்களோ? மிக மிக முற்காலத்திலேயே தமிழன் வகுத்துத் தந்த கால அட்டவணை (calendrier / calendar) வான வெளியில் ஞாயிறு வலம் வருதலை அடிப்படையாகக் கொண்டது. இந்த வான மண்டலத்தைப் பன்னிரண்டு பகுதிகளாகப் பிரித்து 'ஒவ்வொரு பகுதிக்கும் ஒ வ்வொரு பெயர் கொடுத்திருக்கிறார்கள்.ஒவ்வொரு பகுதியிலும் கண்ணுக்குப் புலனாகும் விண்மீன்களைக் கற்பனைக் கோடுகளால் இணைத்துப் பெறும் உருவங்களின் அடிப்படையில் பெயர்கள் இடப்பெற்றுள்ளன.

இப்படிப் பெயர் கொடுத்தவர்கள் கிரேக்க வானியலார் என்பர். அவர்கள் பயன்படுத்திய சொல் என்ன தெரியுமா? 'horos'. இன்று ஐரோப்பிய மொழிகளில் வழங்கும் பல சொற்களுக்கு, 'horoscope, horodateur, hour, heure, year...' இச்சொல்லே வேர்ச் சொல். இந்த 'horos'என்ற கிரேக்கச் சொல்லுக்கு 'boundary, limit, border' என்று பொருள். (காண்க : On line etymology dictionary & The American Heritage dictionary). இந்தச் சொல்லுக்கு மூல வேர்ச்சொல் தேடப் போனால் நம் தமிழுக்குத்தான் வர வேண்டும். பக்கம், விளிம்பு எனப் பொருள்படும் ஓரம் என்ற சொல்லின் அடிப்படையில் பிறந்த சொல் ஓரை. (காண்க : தமிழ்மொழி அகராதி - நா. கதிரைவேற்பிள்ளளை)

இந்த ஓரை என்ற சொல்லின் கிரேக்க வடிவம்தான் 'horos'. வானப் பகுதிகள் பன்னிரண்டிலும் ஞாயிறு தங்கிச் செல்லும் பக்கத்தைத் தமிழர்கள் ஓரை என்று அழைத்தார்கள். இதற்கு வடமொழியில் 'இராசி ' என்று பெயர். கிரேக்கத்துக்கு ஏற்றுமதி ஆனது ஓரை என்ற தமிழ்ச் சொல் மட்டும் அல்ல, அஃது உணர்த்தும் பொருளும் தமிழர்களின் வானியல் அறிவும்தான். ஆக, தமிழர்கள் கண்ட 12 ஓரைகளைத்தான் கிரேக்கர்களும் கண்டனர். இவற்றின் பிரஞ்சு, ஆங்கில, கிரேக்க, தமிழ்ப் பெயர்களையும் அவற்றுக்கு உரிய (தற்காலத்தில் உலகம் நெடுக வழங்கும்) குறியீடுகளையும் எதிர் வரும்பட்டியலில் காண்க.

ஞாயிறு எந்த ஓரையில் தங்குகிறதோ, அந்த ஓரையின் பெயரையே அந்தத் திங்களுக்கு (மாதத்தக்கு)ப் பெயராய் இட்டனர் தமிழர். கிரேக்கர்களும் உரோமர்களும் இம்முறையைப் பின் பற்றவில்லை. எனவே, தமிழர்களாகிய நாம் நம் திங்கள்களுக்கு (மாதத்துக்கு)ச் சுறவம் முதல் சிலை ஈறாக உள்ள தனித் தமிழ்ப் பெயர்களைப் பயன்படுத்துதல் வேண்டும். முதலில் கடினமாகத் தோன்றினாலும் பழகியபின் இவை எளிமையாகிவிடும்.

வார நாள்கள் ஏழினுக்கும் கோள்களின் பெயர்களை இட்டனர் தமிழர். இம்முறையைக் கிரேக்கர்கள் பின்பற்றவில்லை, உரோமர்களோ மிகப் பிற்காலத்தில் தான் இம்முறையைக் கடைப்பிடித்தனர்.

கிழமை என்ற சொல்லுக்கு 'உரிமை' என்று பொருள். எனவே, ஞாயிற்றுக்கு உரிய நாள் என்ற பொருளில் ஞாயிற்றுக் கிழமை என்கிறோம். புதன், சனி என்பன தமிழ்ச் சொற்கள் அல்ல. ஆகவே, அவற்றுக்கு ஈடான அறிவன், காரி என்ற தனித்தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துதல் நன்று.ஆக, தமிழர்களின் புத்தாண்டு அதாவது வள்ளுவர் ஆண்டு சித்திரைத் திங்களில் தொடங்கவில்லை மாறாகச் சுறவம் முதல்நாள் (சனவரி 14)தொடங்குகிறது என்பதை நினைவில் கொண்டு நம் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை அமைத்துக்கொள்ள வேண்டியது தமிழர்களாகிய நம் கடமை.9:24 am
amzath khan - பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதூத, பிரசோத்பத்தி, ஆங்கீரச, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈசுவர, வெகுதானிய, பிரமாதி, விக்ரம, விஷு, சித்திரபானு, சுபானு, தாரண, பார்த்திப, விய இவ்விருபதும் உத்தம வருஷங்கள்.

சர்வஜித்த, சர்வதாரி, விரோதி, விகிர்தி, கர, நந்தன, விஜய, ஜய, மன்மத, துன்முகி, ஏவிளம்பி, விளம்பி, விகாரி, சார்வரி, பிலவ, சுபகிருது, சோபகிருது, குரோதி, விஸ்வாவசு, பராபவ இவ்விருபதும் மத்திம வருஷங்கள்,

பிலவங்க, கீலக, சவுமிய, சாதாரண, விரோதி கிருது, பரிதாபி, பிரமாதீச, ஆனந்த, இராக்ஷஸ, நள, பீங்கள, காளயுக்தி, சித்தார்த்தி, ரவுத்ரி, துன்மதி, துந்துபி, உருத்ரோத்காரி, இரத்தாக்ஷி, குரோதன், அக்ஷய
இவ்விருபதும் அதம வருடங்களாம்.

தமிழ் வருடம் என்று நீங்கள் நினைக்கும் இதில் ஏதாவது ஒரு தமிழ் சொல்லை காண்பியுங்கள்!நீங்கள் சொல்வதை ஏற்று கொள்கிறேன்.
9:27 am
amzath khan - தோழர்களே!
தயவு செய்து ஆரிய புத்தாண்டை தமிழ் புத்தாண்டு என்று சொல்லி தமிழை அசிங்கபடுத்தாதீர்கள்.
9:56 am
Jeyakumar Srinivasan - 01. அம்ஜத் கான் - நல்ல தமிழ்ப்பெயர். நீங்க சொன்னா சரியா இருக்கும். ஆனாலும் எங்கயோ இடிக்குது.

02. தமிழர்கள் ரம்ஜான் கொண்டாடலாமா?

03. தமிழ்ப்புத்தாண்டை சித்திரையிலிருந்து தைக்கு மாத்திட்டா உங்க பிரச்சினை சரியாய்டுமா?

தெரியாமத்தான் கேக்கறேன்னு சொல்லுங்க.
10:13 am
Haran Prasanna - ஆரியர்கள்னா யார்? பிராமணர்களா? அல்லது ஹிந்துக்களா? தமிழறிஞர் தெளிவுபடுத்தவேண்டும். ஆரியப் படையெடுப்புக் குறித்த ஆதாரங்களை இன்னும் முன்வைக்கவேண்டும். தமிழ்ப்புத்தாண்டு புறக்கணிப்பு என்பது தமிழர்களுக்கு ஆதரவாகவா அல்லது ஆரிய பிராமண அல்லது ஆரிய ஹிந்துக்களுக்கு எதிராகவா என்பதையும் தெளிவுபடுத்தவேண்டும். மேலும், எதைப் புத்தாண்டாகத் தமிழர்கள் (இதில் ஹிந்துக்கள், பிராமணர்கள் அடங்குவார்களா என்பது துணைக்கேள்வி) கொண்டாடவேண்டும் என்று சொல்லவேண்டும். அப்போது என்ன என்ன பெயர்கள் தமிழ்ப் புத்தாண்டுகளுக்குத் தரப்படுகின்றன, அவற்றின் மூல ஆதாரம் என்ன, அவை எல்லாமே தமிழ்ப்பெயர்கள்தானா என்பது குறித்த ஆதாரமெல்லாம் தரவேண்டும். தமிழறிஞர் நிச்சயம் நம்மைக் கடைத்தேற்றுவார்.10:20 am
amzath khan - நல்ல கேள்வி !
எனது நிஜ பெயர் சொக்கலிங்கம்.சொக்கலிங்கத்தின் தமிழ் அர்த்தம் அழகிய ஆண்குறி.பண்டைய தமிழர்களிடத்தில் சாதி இல்லையே!நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஆரியர் புகுத்தியதுதானே சாதிமுறை.ரம்ஜான் மட்டுமில்லை.பொங்கல் ஒன்றை தவிர மற்ற எதுவும் தமிழ் இனத்தின் திருநாட்கள் அல்ல.
10:20 am
amzath khan - வாங்க ஹரன் நலமா?
உங்களுடைய எல்லாகேள்விகளுக்கும் “சுருதி ஸ்மிருதி இதிஹாஸ”, “புராண மீமாம்ஸாத்வாய ஸுத்ர விஷாரத்”,“வேதார்த்த ரத்னாகர வேதவாஸஸ்பதி”, “மஹோ பாத்யாய”, “மகா மஹோ பாத்யாய”, அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் எழுதிய இந்து மதம் எங்கே போகிறது என்ற புத்தகத்தில் நீங்கள் கேட்கும் அனைத்து ஆதாரங்களுடன் மிக விளக்கமாக சொல்லபட்டிருக்கிறது.தயவு செய்து அவசியம் வாங்கி படிக்கவும்.
10:29 am
puthumalar raja - ஆரிய புத்தாண்டை ஆரிய னா என்ன நண்பா?10:31 am
amzath khan - சம்ஸ்கிருத மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் ஆரியர்கள்.


மேலும் இதைப்பற்றி படிக்க விரும்புவர்கள் உடனே தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி.


  

Post Comment

13.4.11

கட"மை"

    கலைஞரோ,அம்மாவோ யாரு ஜெயிச்சாலும் சரி...ஏதோ என்னால முடிஞ்ச உதவியா அவங்களுக்கு ஓட்டு போட்டுட்டேன்.இதுக்காக ரெண்டு கட்சிக்காரங்களும் என்னை ரொம்ப கெஞ்சி கேட்டாங்க.நானும் ஆகட்டும் பாக்கலாம்ன்ணு சொல்லி இன்னிக்கு முதன்முதலா ஓட்டு போட போனேன்.(ரெண்டு மாசத்துக்கு முன்னாடிதான் எனக்கு 18 வயசாச்சு..ஹி.ஹி..ஹி...) 
      
       வாக்கு சாவடில நல்ல கூட்டம்.முதல்ல ஏதாவது பிரச்சினைன்னா ஓட முடியற அளவுக்கு இடம் இருக்குதான்னு பாத்துகிட்டேன்.(ஹி.ஹி.. எல்லாம் ஒரு சேப்டிக்கு)ஒரு மணிநேரம் கஷ்டப்பட்டு வரிசைல நின்னு உள்ள போய் பதிவுலகத்தில கிடைச்ச அறிவால (!?) 49.ஓ போடணும்ன்னு கேட்டா அப்டி யாரும் இங்க போட்டிபோடலயேன்னு சொல்லுவாங்க...எதுக்கு கேட்டுகிட்டு..?!இவங்களுக்கு 49.ஓ பத்தி வௌக்குறதுக்கு பேசாம கண்ண மூடிட்டு பொட்டியில ஏதாவது ஒரு பட்டன அமுக்கிட்டு போயிடலாம்.

    எனக்கு முன்னாடி போன ஆளு ஒரு அப்புராணி பயபுள்ள போல...கைய காட்டுங்கன்னு சொன்னா ஜோசியக்காரங்ககிட்ட காட்ற மாதிரி கைய நீட்னாரு.உங்களுக்கு சனி நீச்சமா இருக்கு.ஓட்டு போட்ட பின்னாடி உச்சத்துக்கு போயிடும்.திருப்பி காட்டுய்யா கையன்னு டென்சனாயிட்டாரு ஆபிசர்.

  தி.மு.க. சார்பா நிக்கறவரோட பேர் ஓட்டுப்பொட்டில ரெண்டாவதா இருந்துச்சு.அவங்க ஆளுங்க படிக்காத பாட்டிங்ககிட்ட ரெண்டாவது பட்டன்ல அமுக்குன்னு அவங்க ரெண்டு விரல காமிச்சிகிட்டு மெதுவா சொன்னது ரெட்டை இலைக்கு ஓட்டு கேக்கற மாதிரியே இருந்துச்சு.

    ஓட்டு போட்டவுடன் பொட்டியிலருந்து வந்த சத்தம் அடுத்த அஞ்சு வருத்துக்கு நமக்கு சங்குதான்னு சொல்ற மாதிரியே ஒரு பீலிங்.படிக்காதவங்க ஓட்டு போடறதுக்கு பூத்ல இருக்கறவங்க உதவி பண்ணுவாங்களாம்.கண்டிப்பா தி.மு.கவுக்குதான் போட்ருப்பாங்கன்னு நினைக்கிறேன்.

    கையில மையோட, வாயெல்லாம் பல்லோட இளிச்சுகிட்டே வெளிய வந்தப்ப யாராவது பத்திரிக்கைகாரங்க போட்டோ புடிச்சா யூரின் போற மாதிரி கைய காட்டி கேவலமா ஒரு சிரிப்பு சிரிக்கலாம்ன்னு பாத்தா யாரையும் காணோம்.

     ஹீம்ம்..எப்படியோ ஒரு 5 வருஷத்துக்கு நம்மள அடமானம் வச்சாச்சு...போய் சன் டிவியோட பிறந்த நாளையும்,கலைஞர் டிவியோட விடுமுறை தினக் கொண்டாட்டத்தையும் பாத்து தொலைக்க வேண்டியதுதான்.

வாழ்க ஜன(பண)நாயகம்..!!

Post Comment

7.4.11

நம்பிக்கைதான் வாழ்க்கை..!!

அன்னா ஹசாரே

வேறு வழி தெரியவில்லை..!!

அன்னியசக்திகளிடமிருந்து நம் நாட்டை காக்க இந்திய ராணுவத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்று விட்டு இப்போது நம் உள்நாட்டு ஊழல்களிலிருந்து நம் நாட்டை காக்க மூன்று நாட்கள் தாண்டி உண்ணாநோன்பு இருந்து வருகிறார்.ஊழலில் திளைக்கும் அரசியல்வாதிகளுக்கு எதிராக லோக்பால் என்ற சட்டத்தை அமல் படுத்தக்கோரி இந்த உண்ணாநோன்பை ஆரம்பித்திருக்கிறார்.ஆயுதவழியில் போராடி ஓய்வுபெற்றவரை அஹிம்சை வழியிலும் போராட வைத்துள்ளனர் இந்த ஊழல் பெருச்சாளிகள்.

தயவு செஞ்சு அரசியல் ஆக்கிராதீங்க..!!

இந்த உண்ணாநோன்பையும் தங்கள் அரசியலுக்கு பயன்படுத்த நினைப்பதை விரும்பாமல் அரசியலுக்கும் வன்முறைக்கும் இங்கு இடமில்லை என்று அவர்களை புறக்கணித்துள்ளார்.ஊழலின் ஊற்றுக் கண்களை பக்கத்திலேயே வைத்துக் கொண்டு போராடியிருந்தால் இந்த போராட்டத்திற்கு அர்த்தமில்லாமல் போய்விடும்.அதை சரியாக தவிர்த்திருக்கிறார் ஹசாரே.

காந்திய வழியை ஜெயிக்க விடுகிறார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க கூடாது.ஏனெனில்,அவர் தன் முதுமை வயதிலும் என்னை முதல்வராக்குங்கள் என்று கேட்க வில்லை.ஊழலை கட்டுப்படுத்தும் சட்டத்தை அமல்படுத்துங்கள் என்று தன் உயிரை பணயம் வைத்திருக்கிறார்.

அரசியல்வாதிகளே,நீங்கள் இதுவரை சம்பாதித்தது போதும்.தயவுசெய்து அந்த சட்டத்தை அமல்படுத்துங்கள்.காந்தியத்தின் மீது மக்களுக்குள்ள நம்பிக்கையை தகர்த்து விடாதீர்கள்.ஜெய்ஹிந்த்..!!

Post Comment