சீரியஸாவே இருந்தா வாழ்க்கை சிரிச்சிடும்...

31.7.10

ஒளிப்படங்கள்


நெறய போட்டோஸ் எடுத்துஇருக்கேன்.அத ஒவ்வொண்ணா பதிவில போடலாம்ண்ணு இருக்கேன்.இந்த போட்டோவ PIT contest (வழிபாட்டுதலங்கள்)க்கு அனுப்புனன்.பலபேர் பாராட்டியிருந்தாங்க!! (2,3 பேர் திட்டியிருந்தாலும் இப்படிதான் சொல்லனும்) நீங்களும் திட்டுங்க.ச்சீ..பாராட்டுங்க...

Post Comment

30.7.10

சந்தோஷத்த அனுபவிக்க விடுங்கப்பா!!

குழந்த பொறந்த சந்தோஷத்த அனுபவிக்க விட மாட்டாங்க நம்ம ஆளுங்க.நம்ம இதுவரைக்கும் குட்டி சுவத்துல வெட்டியா உக்காந்திருந்த மாதிரி இனிமே பொறுப்பா இருக்கனும்னு பண்ற அட்வைஸ் எல்லாம் கேக்கறப்போ நமக்கு ஒரே டென்சன்தான் போங்க! ஜோசியருங்ககிட்ட போனா அவரு "க கீ கு" ன்னு ஜாக்கிசான் படத்துல வர மாதிரி இந்த எழுத்துல ஆரம்பிக்கற மாதிரி பேரு வைங்க! நீங்க ஒரே வருஷத்துல பில்கேட்ஸ்க்கு ஈக்வலா ஆயிடலாம்ன்னு சொன்னாரு.நானும் அத நம்ம்ம்ம்பி வர்ற வழி பூரா அத சொல்லிட்டே வந்தா குழந்த பொறந்ததும் தேவா லூசு ஆயிட்டான்னு நினச்சிட்டாங்க .நீங்களே சொல்லுங்க சோசியம் உண்மையா? பொய்யா?

Post Comment

குட்டி தேவதையும் நானும்


வா வா என் தேவதையே !! பொன் வாய் பேசும் தாரகையே !!

பொய் வாழ்வின் பூரணமே!! பெண் பூவே வா!!
வான் மிதக்கும் கண்களுக்கு மயில் இறகால் மைஇடவா!!
மார்புதைக்கும் கால்களுக்கு மணி கொலுசு வாங்கிடவா!!
செல்ல மகள் அழுகை போல் ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை!!
பொன்மகளின் புன்னகை போல் யுக பூக்களுக்கு புன்னகைக்க தெரிய வில்லை!!
என் பிள்ளை எட்டு வைத்த நடையை போல் இந்த இலக்கண கவிதையும் நடந்ததில்லை!!
முத்துக்கள் தெறிக்கின்ற மழையை போல் ஒரு முன்னூறு மொழியில் ஒரு வார்த்தை இல்லை!!
தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததம்மா என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே!!
பிள்ளை நிலா பள்ளி செல்ல அவள் பையோடு என் இதயம் துடிக்க கண்டேன்!!
தேவமகள் தூங்கையிலே சில தெய்வங்கள் தூங்குகின்ற அழகை கண்டேன்!!
சிற்றாடை கட்டி அவள் சிரித்த போது என்னை பெற்றவள் சாயல் என்று பேசி கொண்டேன்!!
மேல்நாட்டின் ஆடை கட்டி நடந்தபோது இவள் மீசையில்லாத மகன் என்று சொன்னேன்!!
பெண்பிள்ளை தனியறை புகுந்ததிலே ஒரு பிரிவுக்கு ஒத்திகையை பார்த்து கொண்டேன்!! 
எதுக்குடா வைரமுத்துவின் வைர வரிகள திருடி இங்க பதிவுன்னு போட்ருக்கேன்னு யோசிக்காதிங்க!எனக்கும் ஒரு குட்டி தேவதை பொறந்திருக்காங்க .இந்த பாட்டுதான் இப்போ மனசில ஓடிட்டே இருக்கு.அதனாலதான் மனசு முழுக்க சந்தோசத்தோட என் முதல் பதிவ ஆரம்பிக்கறேன்.

Post Comment