சீரியஸாவே இருந்தா வாழ்க்கை சிரிச்சிடும்...

27.10.10

புண்ணியம் தேடி...

காசிக்கு எல்லாம் போக வேணாம்...
நம்ம கணினியிலேயே அதை தேடிக்கலாம்.

எப்படி?

மனநலம் பாதிக்கபட்டவங்களை தாயுள்ளத்துடன்
ஆதரிக்கற நம்ம மதுரை இளைஞர் "நேசம் கிருஷ்ணனுக்கு"
 உங்களால் உதவி பண்ணமுடியும்.

இவர பத்தி விகடன்ல கூட ஒரு கட்டுரை வந்திருக்கு.

அப்பப்ப இந்த வெளிநாட்டுக்காரங்க நல்லதெல்லாம் கூட பண்ணுவாங்க...
" CNN HERO OF THE YEAR "
அப்டின்னு ஒரு வாக்கெடுப்பு நடக்குது.
இதுல ஜெயிச்சா அந்த இளைஞர் இன்னும் அவங்களுக்கு உதவலாம்.

நீங்க ஒரு ஐந்து நிமிடம் ஒதுக்கி அவருக்கு இந்த LINK ல போய்
அவருக்கு ஒரு ஓட்டு மட்டும் போடுங்க.உங்களுக்கு புண்ணியமா போகும்.


இவரைப்பற்றி வேறுசில பதிவுகள்...
ஜாக்கிசேகர்
வந்தேமாதரம்
எஸ்கா

படிச்சிட்டு எனக்கு ஓட்டு போடாம போறமாதிரி இதுக்கும் பண்ணிடாதீங்க...

எத்தனை முறை வேண்டுமானாலும் ஓட்டு போடலாம்.. 
ஒரு நாலஞ்சு கள்ள ஓட்டு போடுங்களேன்...
அரசியல்வியாதிகளுக்கு ஓட்டு போடறத விட இவருக்கு போடலாம்.

Post Comment

6 comments:

 1. //எத்தனை முறை வேண்டுமானாலும் ஓட்டு போடலாம்.. //

  சொல்லவே இல்லை!!!

  (12 ஓட்டு போட்டேன்... போதுமா??)

  ReplyDelete
 2. நண்பேண்டா..... சூப்பர்.... நானும் ஒரு பத்து ஓட்டு போட்டுட்டேன்... ஓட்டுக்கு ஆயிரம் ரூபா தர்றதா சொன்னாய்ங்க.. எப்போ தருவீங்க?

  ReplyDelete
 3. Voted already.............Deva!

  ReplyDelete
 4. அருமை நண்பா,
  உங்கள் தளத்திலும் பதிவிட்டதற்கு மிக்க நன்றி
  என் தளத்திலும் பதிவிட்டுள்ளேன்

  முடிந்தால் உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவலை தெரிவியுங்கள். நவம்பர் மாதம் 18 ஆம் தேதியோடு ஓட்டு போடுவது முடிகிறது. அதற்குள் மற்றவர்களுக்கு தெரிவிக்கவும்.

  * பதிவர்கள் நினைத்தால் இதை அனைவருக்கும் எளிதாக கொண்டு செல்ல முடியும். பதிவர்களே தமிழனுக்காக ஒரு பதிவை போடுங்கள்.

  நம்மால் முட்டிந்தவரை ஒரு தமிழரின் வெற்றிக்கு துனையாய் நிற்போம்
  அலட்சியபடுத்தாமல் மறக்கமால் உங்கள் ஓட்டுகளை பதிவு செய்யுங்கள்

  இனி நீங்கள் செய்யவேண்டியது சமூகத்தின் உன்னத மனிதரை வெற்றி தோல்வி என்கிற நிலைப்பாடு இல்லாமல் அவரை அடையாளம் காட்டுங்கள் இந்த சமூகத்திற்கு. இனி இந்த heroes.cnn.com சென்று அவருடையை படத்தை கிளிக்கியவுடன் கீழே உள்ள கட்டத்திற்குள் அவர் படம் வந்திருக்கும் அதனருகில் CAPTCHA இருக்கும் அதையும் அப்படியே டைப் செய்து கீழிருக்கும் VOTE பொத்தானை அழுத்தவும் இப்பொழுது உன்னத மனிதரின் சேவையில் நீங்களும் ஒரு பங்காளிதான்.

  http://urssimbu.blogspot.com/2010/10/please-help.html


  நன்றி
  என்றும் நட்புடன்
  மாணவன்

  ReplyDelete
 5. நல்ல பகிர்வு....

  ReplyDelete
 6. அவ்ருக்கும் ஓட்டு போட்டாச்சு... உங்களுக்கும் ஓட்டு போட்டாச்சு

  ReplyDelete

No Bad Words... தேவா பாவம்!!!